யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விரைவில் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றம் பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
இராணுவத் தொண்டர் படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னான்டோ விரைவில் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து தலைமையகப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்போதே மேஜர் ஜெனரல் சந்திரசிறி இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளார்.
அவர் கடந்த வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகளைச் சந்தித்தபோது தனது பிரியாவிடையை பெற்றுக் கொண்டதாகத் தெரியவருகிறது.
அதேவேளை சந்திரசிறி எதிரவரும் டிசம்பர் 31ம் திகதியுடன் ஓய்வு பெறவேண்டியிருப்பினும் அவருக்கு சேவை நீடிப்பை ஜனாதிபதி மகிந்த வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.