அம்பாறையில் கருணாகுழுவைச் சேர்ந்த நால்வர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். கல்முனை குருந்தையடியில் நேற்றிரவு 9.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள மதுபான நிலையம் ஒன்றின் முன்பாக நின்று கொண்டிருந்தபோதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தபட்டது.
இந்தச் சம்பவத்தில் 2 கருணாகுழு உறுப்பினர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
பின்னர் அவர்களில் இருவர் மரணமாயினர். காயமுற்றவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.