
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் அவர் இறந்து விட்டதாகவும் படுகாயமடைந்ததாகவும் கதை கட்டிய இராணுவத்தரப்பு இப்போது அவர் நடக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.
இத்தனைக்கும் காரணம் அண்மையில் வெளியான ஒரு புகைப்படமே.
அண்மையில் புலிகளின் விமானிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் பங்கேற்றது பற்றிய படங்கள் வெளியாகியிருந்தன.
அதில் பிரபாகரனுக்கு அருகே சக்கரநாற்காலி ஒன்று அரைகுறையாகத் தெரிகிறது.
அவருக்கு அருகில் இருப்பதால் அது அவருடையதுதான் என்பது இராணுவப் புலனாய்வுத்துறையின் தப்புக்கணக்கு.
அவர் விமானத் தாக்குதலின் பின்னர் நடக்கமுடியாமல் இருப்பதால் தான் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார் என்றும் அது கண்டுபிடித்திருக்கிறது.
ஆனால் அந்த சக்கர நாற்காலியின் ஒருவர் உட்கார்ந்திருப்பது பலருக்கும் தெரியவில்லை.
அதில் அமர்ந்திருப்பது புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கஸ்ரோ எனப்படும் மணிவண்ணன்.
அவர் ஆனையிறவுச் சண்டையின்போது இடுப்புக்குக்கீழ் இயங்கமுடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
(படங்களில் முதலாவது- கண்ணை மூடிக்கொண்டு வதந்தியை கட்டவிழ்த்து விடுவதற்கு காரணமாக இருந்தது.
இரண்டாவது- பிரிகேடியர் பால்ராஜ் இறுதி அஞ்சலி நிகழ்வில் சக்கரநாற்காலியில் கஸ்ரோவும் மலர் வளையத்துடன் வரும் பிரபாகரனும்)