யாழ்- முகமாலை முன்னரங்க நிலைகளில் நேற்றும் மோதல் இடம்பெற்றதாகப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
நேற்றுக்காலை 8.30 மணியளவில் முகமாலையில் உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் படையினர் தரப்பில் சிறியளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.