பனாகொட இராணுவ முகாமருகே மழைக்கு ஒதுங்கிய படையினர் மீது வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்தது. இதில் 5 படையினர் படுகாயம் அடைந்தனர்.
நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வவுனியா படைத் தளத்தில் பணியாற்றும் இந்தப் படையினர் விசேட பயிற்சிக்காக பனாகொட இராணுவ முகாமுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
காயமுற்ற படையினரில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.